mahinda 3 1
அரசியல்இலங்கைசெய்திகள்

‘மைனா கோ கம’ தீ வைத்து எரிப்பு! – இரும்புக் கம்பிகளுடன் மஹிந்தவின் ஆதரவாளர்கள் அட்டகாசம்

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்துபவர்களால் அலரி மாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’ கூடாரங்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

அட்டாகாசத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கூடாரங்களைப் பிய்த்து எறிந்து, தீ மூட்டிக் கொளுத்தியுள்ளனர். இதனால், அப்பகுதி எங்கும் கரும்புகையால் மூடப்பட்டது.

இன்று அலரி மாளிகைக்கு நேரில் வந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள், மஹிந்தவைப் பதவி விலக வேண்டாம் எனக் கோரினர். அதன்பின்னர் அலரி மாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’வுக்கு வந்த அவர்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் குண்டாந்தடிகளை ஏந்தியவாறு ரகளையில் ஈடுபட்டு, அடாவடித்தனங்களைக் காண்பித்தனர். அக்குழுவைச் சேர்ந்த இன்னும் சிலர், தேசியக் கொடிகளை ஏந்தியவாறு மஹிந்தவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

mahinda 1mahinda 2

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 101
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: போர் நிறுத்தத்தைத் தொடர ஆஸ்திரேலியா வலியுறுத்தல்!

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத்...

world 103
விளையாட்டுசெய்திகள்

மதீஷா பத்திரானா உடற்தகுதி தேர்வில் வெற்றி: கேகேஆர் அணியில் இணைய பச்சைக்கொடி!

இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரானா, இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) நடத்திய...

world 102
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இன்று பிற்பகல் பலத்த மின்னலுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் அவசர எச்சரிக்கை!

இன்று (ஏப்ரல் 12, 2026) பிற்பகல் 1.00 மணிக்கு மேல் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான...

world 99
உலகம்செய்திகள்

அணு ஆயுத விவகாரத்தில் முட்டுக்கட்டை: அமைதி ஒப்பந்தம் இன்றி இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை நிறைவு!

ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் பிரதான நிபந்தனையை ஏற்க...