Medam
விரயச் செலவுகள் அதிகரிக்கும். ஒரு பிரச்சனையில் இருந்து மீண்டால் அடுத்த பிரச்சனை தலை தூக்கும்.
வேலை இடத்தில் உங்களுக்கு கெடுதல் செய்ய நினைப்பார்கள். உயரதிகாரிகள் உங்களை புரிந்து கொள்ளமாட்டார்கள்.
யாரையும் நம்பி எந்தக் காரியத்திலும் இறங்க முடியாது. பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். வெளியூர் பயணங்களால் அதிக நன்மை இல்லை.
Edapam
சொன்ன சொல்லைக் காப்பாற்றி செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.
தொழிலில் மிகச்சிறந்த முன்னேற்றம் அடைவீர்கள். கிடைத்த லாபத்தை வேறு தொழில்களில் முதலீடு செய்வீர்கள்.
அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். வேலை இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். எடுக்கின்ற முயற்சிகள் சாதகமாகவே முடியும்.
Mithunam
தொழிலில் இருந்த மந்தநிலை விலகி பிரகாசமான வாய்ப்புகள் தெரியும். சிலருக்கு புதிய தொழில் தொடங்க உதவிகள் கிடைக்கும்.
ஏற்றுமதி இறக்குமதி கமிஷன் தொழில் கைகொடுக்கும். அதிக ஆசை சிலநேரங்களில் அவஸ்தையை கொடுக்கும்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சிறு வியாபாரிகள் அதிக லாபம் பெறுவார்கள்.
Kadakam
குடும்பத்தில் சங்கடத்தைச் சந்தித்த நீங்கள் பிரச்சனை விலகி சந்தோஷம் அடைவீர்கள்.
வீட்டில் திருமணப் பேச்சுவார்த்தை நடக்கும். பொருளாதார சிக்கலால் ஏற்பட்ட கல்வித் தடை நீங்கும். வெளியூரில் தங்க வேண்டிய நிலை உருவாகும்.
மனதைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத காரியங்களில் தலையிட வேண்டாம்.
Simmam
தொழிலில் அக்கறை செலுத்துவீர்கள். ஆனால். அதிக லாபம் பெற இயலாது.
வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையே காணப்படுகிறது. ஊழியர்கள் வேலையில் அக்கறையாக இருக்க வேண்டும்.
அரசாங்க உதவிகள் சற்று தள்ளிப் போகும். பங்குச்சந்தை முதலீடுகள் சாதகமாக இருக்காது. ரியல் எஸ்டேட் தொழிலும் முடக்கமாகவே காணப்படும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.
Kanni
கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நடப்பீர்கள். எதிர்பாராத தன லாபத்தை அடைவீர்கள்.
புதிய முதலீடுகளைக் கொஞ்சம் தள்ளி வையுங்கள். இருப்பதைக் கொண்டு வாழப் பழகுங்கள்.
சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். வேலை இடங்களில் செல்வாக்குப் பெறுவீர்கள். பெற்றோரின் மனமறிந்து பிள்ளைகள் நடப்பார்கள்.
Thulaam
சிறுதொழில் செய்பவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை அடைவார்கள். உடனடி ஆதாயம் கிடைக்காது.
பெரும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு எதிர்ப்புகள் உண்டாகும். விளை பொருள்கள் எதிர்பார்த்த விலைக்கு விற்காது.
தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் சக ஊழியர்களிடமும் முதலாளிகளிடம் ஒத்துப்போக வேண்டும்.
Viruchchikam
தடைபட்டிருந்த வருமானங்கள் தாராளமாக வரத்தொடங்கும்.
உங்களுக்கு நெருக்கடியைத் தந்த கடன்கள் அடையும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கையும் அந்தஸ்தையும் அதிகரிப்பீர்கள்.
திருமண வயதினருக்கு மங்கல நிகழ்ச்சி கைகூடும். பிள்ளைகள்தான் கொஞ்சம் பிரச்சினையைத் தருவார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழுபறி நீடிக்கும்.
Thanusu
குழப்பமான சூழ்நிலைகள் விலகி நிலையான வருமானம் பெறுவீர்கள்.
பெற்றோர்கள் வழியில் சில நன்மை அடைவீர்கள். பிள்ளை குறித்த கவலை நீங்கும்.
வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். பொருள் சேர்க்கையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
உடலைப் பீடித்திருந்த நோய்கள் அகலும். விவசாயத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
Maharam
சின்னச்சின்ன சங்கடங்களை சந்தித்தாலும் வீட்டில் சுப நிகழ்ச்சிகளை முடிப்பீர்கள்.
எதிர்ப்புகள் தந்த பிரச்சனையைச் சாதுரியத்தால் சமாளிப்பீர்கள். கெடுதல் செய்ய நினைத்தவர்கள் கெடுதல் அடைவார்கள்.
பூர்வீகச் சொத்து பற்றிய சிந்தனை வேண்டாம். கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும்.
Kumbam
வியாபாரத்தில் இருந்த தடைகள் வெகுவாக குறையும். இயந்திரவகை தொழில்களில் ஈடுபாடு ஏற்படும்.
எதையும் சிந்தித்து நன்றாக செயல்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு இடம் மாறுதல் ஏற்படலாம். கணவன்-மனைவிக்குள் அனுசரிப்புத் தன்மை காணப்படும்.
வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்களும் உறவினர்களும் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள்.
Meenam
நன்மைகளையும் தீமைகளையும் கலந்து சந்திப்பீர்கள். தொழிலில் சீரான முன்னேற்றம் ஏற்படும்.
கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற இயலாது. வேலையில் உங்களுடைய நேரடிக் கண்காணிப்பு அவசியம்.
அரசுப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். பேச்சுவார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் சிக்கல் உருவாகும்
#Astrology
Leave a comment