மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பொதுச்சொத்துகளுக்கோ அல்லது தனியார் சொத்துகளுக்கோ நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது அவரது பணிப்பின் கீழ் செயற்படும் எவரும் சேதம் ஏற்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது என நேற்று களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம் அறிவித்தது.
இந்தக் கட்டளை 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கு எதிராக சாணக்கியன் எம்.பியால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment