அசேல சம்பத்
இலங்கைசெய்திகள்

சிற்றுண்டிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு!

Share

“சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.”

– இவ்வாறு சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2 ஆயிரத்து 675 ரூபாவாகக் காணப்பட்ட 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 2 ஆயிரத்து 185 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4 ஆயிரத்து 860 ரூபாவாகும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

1,071 ரூபாவாக காணப்பட்ட 5 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 874 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 1,945 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

506 ரூபாவாக இருந்த 2.3 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 404 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 910 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்குவதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமையால், தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டால், சிற்றுணவக தொழிற்துறை வீழ்ச்சியடையும். இது பாரிய பிரச்சினையாகும்.

எனவே, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, தங்களது தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் தாங்கள் விரும்பியவாறு விலை அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு சிற்றுணவக உரிமையாளர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், தாங்கள் விலை அதிகரிப்பை மேற்கொண்டால், உண்மையில் இந்த தொழிற்துறை வீழ்ச்சியடையும் என சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், நேற்றுமுன்தினம் நாட்டை வந்தடைந்த கப்பலில் இருந்து தரையிறக்கப்பட்ட மூவாயிரத்து 900 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், 3 ஆயிரத்து 700 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் பெரும்பாலும் இன்று நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த எரிவாயு அடுத்த மாத முற்பகுதியின் சில தினங்கள் வரையில் போதுமானதாகும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...