அருந்திக்க பெர்னாண்டோ
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்த பதவி விலக வேண்டும்! – கோட்டாவிடம் ‘மொட்டு’ எம்.பிக்கள் வலியுறுத்து

Share

பிரதமர் மஹிந்த உள்ளிட்ட அரசு பதவி விலக வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசு ஒன்றை அமைப்பதற்கு வழிவகுத்து, பிரதமர் மற்றும் அரசு பதவி விலக வேண்டும் என்று இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற அமைச்சர்ள், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

அதன்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்சவோ அல்லது அரசோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து தான் பதவி விலகப் போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...