நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கோட்டாபய அரசைப் பதவி விலகுமாறு வலியுறுத்தியும் முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டது.
முள்ளியவளை கொமர்ஷல் வங்கிக்கு அருகில் இருந்து ஆரம்பமான கவனயீர்ப்புப் பேரணி தண்ணீரூற்று நகரத்தைச் சென்று நிறைவடைந்தது.
இதில் அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக அமைப்பினர், வர்த்தக சங்கத்தினர், ஓட்டோ சாரதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
#SriLankaNews
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment