வேலை நிறுத்தம் e1650687947895
அரசியல்இலங்கைசெய்திகள்

அதிபர்கள், ஆசிரியர்கள் திங்கள் வேலை நிறுத்தம்!

Share

தற்போதைய நெருக்கடி நிலைக்குத் தீர்வு காணுமாறு அரசை வலியுறுத்தி அரச பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வேலை நிறுத்தம் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தொடர் போராட்டங்கள் காரணமாக மாணவர்களும் ஊழியர்களும் பாடசாலைக்கு செல்வதற்குப் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது வீடுகளுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பணி புரிவதற்கும் மாணவர்கள் கல்வி கற்பதற்கும் அனுமதிக்க வேண்டும் என்ற தங்களின் முன்மொழிவு அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது என்று அதிபர்களின் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு நியாயமான தீர்வை அரசு வழங்க வேண்டும் என்று கோரி எதிர்வரும் திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கத்தின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...