கொரோனா
செய்திகள்உலகம்

கொரோனா பாதிப்புக்களை தடுக்கும் மருந்துகள் கண்டுபிடிப்பு!!

Share

கொரோனாத் தொற்றினால் ஏற்படும் விளைவுகளைத் தடுப்பதற்கு போர்த்துக்கல் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் 3 மருந்துகளை கண்டறிந்துள்ளனர்.

போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நோவா பல்கலைக்கழக இரசாயன மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 3 மருந்துகளின் கலவையானது கொரோனாப் பரவலை குறைக்கும் என்று கூறுகின்றனர்.

இதுபற்றி ஆராய்ச்சியாளர் சிசிலியா அர்ரியானோ கூறுகையில், “இந்த மருந்துகளால் வைரஸ் பரவுவது 50 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது என்பதைக் கண்டுள்ளோம்”. வைரஸ் செயற்பாட்டை குறைக்க ‘என்எஸ்பி 14’ என்ற வைரஸ் புரதத்தில் இந்த மருந்துகளின் கலவை செயல்படும்” என குறிப்பிட்டார்.

இந்த மருந்துகள், கொரோனாத் தொற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நிலைமையை கட்டுப்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இரண்டு மருந்துகள் ஏனைய நோய்களுக்கு மருந்தாகும், எஞ்சிய மருந்து சந்தை ஒப்புதலுக்கு காத்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

ஆனால் அவர்கள் காப்புரிமை பிரச்சினையால் மருந்துகளின் பெயர்களை வெளியிடவில்லை.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...