அரசியல்
ரம்புக்கனை சம்பவம்: ஆராய மூவர் கொண்ட குழு நியமனம்!
ரம்புக்கனையில் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக, மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள அலுவலகத்திலிருந்து விசேட குழு ஒன்று சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து காலி, மாத்தறை, கம்புறுபிட்டிய, அக்குரஸ்ஸ, கண்டி, மாத்தளை, இரத்தினப்புரி, கேகாலை, அம்பலாங்கொடை, ஹட்டன், கொட்டகலை, சிலாபம், ஹப்புத்தளை, பண்டாரவளை, எல்பிட்டிய, அநுராதபுரம், மினுவாங்கொட, கெஸ்பேவ, பண்டாரகம, பத்தரமுல்லை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மாத்தறை நகரில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காகப் பொலிஸாரால் நேற்றிரவு கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் இதன்போது 8 பேர் கைதுசெய்யப்பட்டனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login