பிரதான எதிர்க்கட்சியால் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தான் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்குமார் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி குறித்த பிரேரணைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கும்போது, அதற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்ற தீர்மானம் தன்னால் அறிவிக்கப்படும் என்றும் ஊடகங்களிடம் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக அரசால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு அரவிந்குமார் எம்.பி. ஆதரவு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment