சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான, ஒரு கிலோகிராம் அளவிலான ஐஸ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை யாழ்., நெடுந்தீவில் வைத்து, கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, குறித்த போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 3 சந்தேகநபர்களையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
அத்துடன், சந்தேகநபர்கள் போதைப்பொருளை கடத்துவதற்குப் பயன்படுத்திய படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment