பொழுதுபோக்கு
வாழைப்பழத் தோலின் அற்புத நன்மைகள்
வாழைப்பழத் தோலின் அற்புத நன்மைகள்
வாழைப்பழத்தை சாப்பிட்டதுடன் அதன் தோலை உடனே குப்பைத் தொட்டில் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அந்த வாழைப்பழத்தோலில் நன்மை பயக்கும் விடயங்கள் இருக்கின்றன என்பது தெரியுமா?
வாழைப்பழத் தோல் எம் சரும அழகுக்கு பயனளிக்கின்றது. அவை என்னவென்று பார்ப்போம்.
பருக்களை விரட்டும்
வாழைப்பழத் தோலில் உள்ள விற்றமின் A இல் உள்ள கரோடினோய்ட் விற்றமின், பரு உள்ள இடத்தை சரி செய்து, பருக்களை குணப்படுத்தும்.
பருக்கள் உள்ள இடத்தில் வாழைப்பழத் தோலை மெதுவாகத் தேய்த்து 10 நிமிடம் மசாஜ் செய்து சிறிது நேரத்தில் கழுவ வேண்டும்.
கருவளையங்களை நீக்கும்
இன்றைய பெண்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று கருவளையம். இது முகத்தின் அழகை கெடுத்து முதுமைத் தோற்றத்தை உண்டு பண்ணிவிடும். இதற்கு வாழைப்பழத் தோலை கற்றாழை ஜெல்லுடன் கலந்து கருவளையத்தின் மீது பூசிக்கொண்டு வர கண்களுக்கு புத்துணர்வு கிடைப்பதோடு சுருக்கங்கள் வராது தடுக்கின்றது.
பற்களை பளிச்சிட
பற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படின் உடனடி தீர்வாக வாழைப்பழத் தோலை பற்கள் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து பிரஷ் செய்தால் பற்கள் பளிச்சிடுவதை உணர்வீர்கள்.
தழும்பு, மரு நீக்கி
வாழைப்பழத் தோலை மருக்கள் தழும்புகள் உள்ள இடத்தில் ஒட்டி விடுங்கள். சிறிது நேரம் கழித்து நீக்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்து வந்தால் மருக்கள் நாளடைவில் நீங்கிவிடும்.
பூச்சி கடிக்கு
நுளம்பு பூச்சி போன்றன கடித்து அரிப்பு எரிச்சல் சருமத்தில் தோன்றினால் வாழைப்பழத் தோலை தேய்த்து பாருங்கள். எரிச்சல் மறைந்து அரிப்பு நீங்கிவிடும்.
கால் பளிச்சிட
கால் வறண்டு இருந்தால்,அல்லது காலில் ஆணி இருந்தால், வாழைப்பழத் தோலை பாதத்தின்மீது வைத்து கட்டிவிடுங்கள். தினமும் இரவு தூங்கும்போது இவ்வாறு செய்து வந்தால் பாதம் பளிச்சிடுவதை அவதானிக்கலாம்.
வாழைப்பழத் தோலை குப்பைத்தொட்டுக்கு வீசுவோருக்கு வாழைப்பழத்தோலில் இத்தனை நன்மைகள் உள்ளதா என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? வாழைப்பழத்தை விட வாழைப்பழத் தோலில் அதிக நார் சத்துக்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
You must be logged in to post a comment Login