டக்ளஸ் தேவானந்தா
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ்த் தரப்புக்களின் அரசியல் வழிமுறை மாற்றத்தை வரவேற்கின்றேன்! – டக்ளஸ் தெரிவிப்பு

Share

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கான சிறந்த ஆரம்பமாக மாகாண சபை முறைமையே சிறந்த ஆரம்பம் என்ற தனது வழிமுறையை தமிழ் தரப்புக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவருத்தி உட்பட பல திடடங்களுக்கான கோரிக்கைகளையும் இந்தியாவிடம் முன்வைத்துள்ளார்.

மேலும், தமிழ் மக்களின் கலாசார விழுமியங்களையும் பாரம்பரியங்களையும் பாதுகாத்து வளர்த்தெடுப்பதற்காக யாழ்ப்பாணத்தில் நவீன வசதிகள் அடங்கிய கலாசார நிலையத்தை அமைத்து தந்தமைக்காக இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் இலங்கை தமிழ் மக்கள் சார்பான தனது நன்றியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே மேற்படி விடயங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் வெளிப்படுத்தப்பட்டன.

சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இரண்டு நாடு அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில்,

பருத்தித்துறை மற்றும் பால்சேனை உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்களை அமைத்து தருவதற்கு ஏற்கனவே இந்தியா சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கு இந்தியாவால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

இதன்போது, இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் கச்சதீவில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு தொடர்பாக எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் இடம்பெற்ற அதிகாரிகள் மட்டக் கலந்துரையாடலும் பயனுள்ளதாக அமைந்திருந்தமையை சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான பேச்சுகளை வினைத்திறனாகத் தொடர்ந்தும் மேற்கொள்வதன் ஊடாக, குறித்த விவகாரத்துக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை அடைய முடியுமென இரண்டு நாடுகளின் அமைச்சர்களும் நம்பிக்கை வெளியிட்டனர்.

அத்துடன் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை தொடர்பான சுமார் 23 திட்டங்களைகளை இந்திய வெளியுறவு அமைச்சரிடம் முன்வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேலதிக திட்டங்கள் தொடர்பான எதிர்பார்ப்புக்களையும் வெளியிட்டார்.

அவையாவன,

* வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு கடன் திட்டத்தின் அடிப்படையில் 100 மில்லியன் பெறுமதியான மூலப் பொருட்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள்.

* காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான சரக்கு கப்பல் போக்குவரத்து.

* காங்கேசன்துறைக்கும் இராமேஸ்வரம் மற்றும் பண்டிச்சேரி இடையிலான பயணிகள் படகு சேவை.

* பலாலி – திருச்சி இடையிலான விமானப் போக்குவரத்து சேவை.

* காரைநகரில் அமைந்துள்ள சீநோர் படகு கட்டும் தொழிற்சாலையை செயற்படுத்துவதற்கு இந்திய முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளுதல்.

அதேவேளை, அரசியல் தீர்வு விடயத்தில், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமையை முழுமையாக அமுல்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைய முடியும் என்று, கடந்த 30 வருடங்களுக்கும் அதிகமாக தான் வலியுத்தி வருகின்ற நிலைப்பாட்டிற்கு, காலம் கடந்தாயினும் ஏனைய தமிழர் தரப்புக்கள் வந்திருப்பதை வரவேற்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, காணி விடுவிப்பு – அரசியல் கைதிகள் விவகாரம் – காணாமல்போன உறவுகளுக்கான பரிகாரம் – அபிவிருத்தி போன்றவை தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச உட்பட்ட சக அமைச்சர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி, தன்னால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...