சந்திரிகா 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்ட சந்திரிகா வியூகம்! – பொதுவேட்பாளரைக் களமிறக்க முயற்சி

Share

2024 ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து, பொதுவேட்பாளரைக் களமிறக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் ஈடுபட்டுள்ளார் எனத் தகவல் கசிந்துள்ளது.

சில எதிரணிகள், சிவில் அமைப்புகள் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்கான வியூகத்தை அவர் வகுத்து வருகின்றார் எனவும், இரகசியப் பேச்சுகள்கூட இடம்பெற்று வருகின்றன எனவும் தெரியவருகின்றது.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள அரசியல் பின்புலம் கொண்ட ஒருவரையே சந்திரிகா அம்மையார் இலக்குவைத்துள்ளார் எனவும், தமிழ் பேசும் மக்களின் ஆதரவைப் பெறும் வகையிலுமே அந்த நபரைச் சந்திரிகா, தெரிவுப் பட்டியலில் முன்னிலையில் வைத்துள்ளார் எனவும் அறியமுடிகின்றது.

2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதற்கு சந்திரிகா அம்மையாரே திரைமறைவில் காய்நகர்த்தல்களை மேற்கொண்டிருந்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...