gallerye 030109868 2754446
உலகம்செய்திகள்

ஜப்பான் பிரதமர் இந்தியாவிற்கு வருகை!!

Share

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று இந்தியா வந்தடைந்தார்.

இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இந்தோ பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

இந்த பயணத்திற்கு முன்பாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறுகையில், ” உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு இந்த பயணத்துடன் ஒத்துப்போகிறது.

இதனால், சர்வதேச ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், ஜப்பானும் இந்தியாவும் பல்வேறு விஷயங்களில் இணைந்து செயல்படும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதையும் பிரதமர் கிஷிடா நோக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின்போது அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் திட்டத்தை அவர் அறிவிப்பார் என்று ஜப்பானின் செய்தித்தாள் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#WorldNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிட்டபெத்தர பகுதியில் இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு!

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு...

08 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனித புதைகுழி: ஏப்ரல் 20-ல் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் செம்மணி மனித புதைகுழி வழக்கு, நேற்று (12) யாழ்ப்பாண நீதவான்...

07 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அல்லைப்பிட்டி சிறுவன் உயிரிழப்புச் சம்பவம்: விசாரணைகளை கொழும்பு மாற்ற ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவு!

கடந்த பெப்ரவரி மாதம் 10-ஆம் திகதி அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17...

06 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய எரிபொருள் கொள்வனவு: இலங்கை மற்றும் ரஷ்யா இடையிலான உயர்மட்ட கலந்துரையாடல்!

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சமாளிக்கும் நோக்கில்,...