ponseka
அரசியல்இலங்கைசெய்திகள்

“நிலையான ஆட்சிக்கு ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டும்”

Share

“பொதுத்தேர்தல் அல்ல, முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டும். இதுவே உறுதியான ஆட்சிக்கு வழிசமைக்கும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஏன் ஜனாதிபதித் தேர்தலை முதலில் கோரியுள்ளார் என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு எமது கட்சி வெற்றி பெறும் பட்சத்தில், மற்றுமொரு கட்சி உறுப்பினர் ஜனாதிபதியாக இருந்தால் அவர் தடையை ஏற்படுத்துவார். கடந்த ஆட்சியில் மைத்திரி செயற்பட்ட விதம் அனைவருக்கும் தெரியும். எனவேதான் முதலில் ஜனாதிபதித் தேர்தலைக் கோருகின்றோம்.

எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைக் கட்சிதான் தீர்மானிக்க வேண்டும். அதில் தலைவரும் ஆதிக்கம் செலுத்துவார். கட்சி எடுக்கும் முடிவை நாம் ஏற்போம். ஆனால், பொதுவேட்பாளர் வெளியில் இருந்து வர முடியாது. எமது கட்சி வேட்பாளர், பொதுவேட்பாளராகலாம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...