எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதாரச் சீர்கேடு குறித்தும் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment