sampanthan
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி – கூட்டமைப்பு சந்திப்பு திட்டமிட்டவாறு நடக்கும்! – சம்பந்தன் தகவல்

Share

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திட்டமிட்டவாறு நடைபெறும். ரெலோவின் நிலைப்பாடு தொடர்பில் நான் பதிலளிக்க விரும்பவில்லை.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிப்புகள் வெளியாகி இருந்தபோதும், அவை நடைபெற்றிருக்கவில்லை.

இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தால் இந்தச் சந்திப்பு குறித்த அறிவித்தல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைமைக்கு வழங்கப்பட்டது.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இப்போது விடுத்துள்ள அழைப்பை ஏற்பது சர்வதேசப் பொறியிலிருந்து அவரை மீட்கும் நடவடிக்கையாகி விடும் எனத் தெரிவித்த ரெலோ, அதன் காரணமாக அந்தச் சந்திப்பில்தான் கலந்துகொள்வதில்லை என முடிவு செய்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தனது முடிவைக் கூட்டமைப்பின் தலைமைக்கு எழுத்திலும் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., மார்ச் 10 ஆம் திகதியிட்டு அனுப்பிவைத்தார் எனக் கூறப்படும் கடிதம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இந்த விடயம் பற்றி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோது,

“ரெலோவின் நிலைப்பாடு தொடர்பில் நான் பதிலளிக்க விரும்பவில்லை. எனினும், ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திட்டமிட்டவாறு நடைபெறும்.

ஜனாதிபதி காரியாலயத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியுடன் அவர் தரப்பில் யார் கலந்துகொள்வார்கள் என்று எமக்குத் தெரியாது.

கூட்டமைப்பின் சார்பில் நானும், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வோம்.

வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைமை மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள், புதிய அரசமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை இந்தச் சந்திப்பின்போது பேசவுள்ளோம்” – என்றார்.

https://tamilnaadi.com/news/2022/03/12/is-a-meeting-with-the-president-necessary/

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...