புதுவருட கொத்தணியை தடுத்திருக்க முடியும் – ரம்புக்கெல!!
நாட்டில் திட்டமிட்ட வகையில் சினோபாம் தடுப்பூசிக்கான அனுமதியை ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை உரிய நேரத்தில் வழங்கவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உரிய நேரத்தில் சினோபாம் தடுப்பூசிக்கான அனுமதி கிடைத்திருக்கும் பட்சத்தில், புதுவருட கொத்தணி நாட்டில் உருவாகியிருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையிலிருந்த ஒரு சிலர், திட்டமிட்ட வகையில் சினோபாம் தடுப்பூசிக்கான அனுமதியை வழங்க 5 வாரங்கள் தாமதப்படுத்தினர் எனவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இவ்வாறான சூழ்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
Leave a comment