வேலுகுமார் எம்.பி
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் பொருளாதாரத்தில் எப்போதும் மலையக பெண்களின் பங்களிப்பு அளப்பரியது! – வேலுகுமார் எம்.பி

Share

” ஆடைக் கைத்தொழில், சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் என்பவற்றின் ஊடாக இந்நாட்டுக்கு டொலர்கள் வருவதற்கு முன்னர், எமது மலையக தாய்மாரே டொலர் வருமானத்தை பெற்றுக்கொடுத்தனர். எனினும், இந்நாடும், அரசுகளும் அவர்களுக்கு இன்னமும் உரிய பரிகாரத்தை வழங்கவில்லை” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சர்வதேச மகளிர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. சுதந்திரத்துக்கு முன்னரும் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரும் இந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மலையக பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. ஆடைத்தொழிற்சாலை மற்றும் சுற்றுலாத்துறை என்பவற்றிலிருந்து இந்நாட்டுக்கு டொலர் வருவதற்கு முன்னர், இந்நாட்டுக்கு டொலர்களை உழைத்து தந்தது எமது மலையக தாய்மார், சகோதரிகளே. இந்நாட்டின் பொருளாதாரத்துக்காக இரத்தம் சிந்திய அவர்களுக்கு இந்நாடு மற்றும் அரசுகள் என்ன செய்துள்ளன? தொழில் இடங்களில் அவர்களுக்கான அடிப்படை வசதிகள்கூட இல்லை.

அதேவேளை, இன்று சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்கியது யார்? அரசின் முறையற்ற கொள்கை மற்றும் தெளிவற்ற பொருளாதாரம் காரணமாகவே நாட்டில் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. டொலரின் பெறுமதி அதிகரிக்கப்பட்டு, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.

எனவே, பொருட்களுக்கான தட்டுப்பாடு, கறுப்புச்சந்தை, பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும். அதற்கு பெண்கள் உட்பட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...