இலங்கை அமெரிக்கா
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் பேசுங்கள்! – இலங்கைக்கு அமெரிக்கா அறிவுரை

Share

இலங்கையில் நின்று, நிலைத்து நீடிக்க கூடிய ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சு நடத்துமாறு இலங்கை அரசை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது

”சகலரையும் ஒன்றிணைத்து, நிரந்தரத் தீர்வு ஒன்றை நோக்கி முன்னேறுவதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளுடனும், சிவில் சமூக நிறுவனங்களுடனும் ஈடுபட்டு செயற்படுமாறு நாம் இலங்கை அரசை கோருகின்றோம்”

– என்று ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் நேற்றைய அமர்வில் இலங்கை தொடர்பான கலந்துரையாடலின்போது அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கையில் முக்கியமான பல மனித உரிமைகள் வழக்குகள் பின்னடைவு கண்டிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா, மிக முக்கியமான மனித உரிமை மீறல் வழக்கொன்றில் சம்பந்தப்பட்ட ஒருவர் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு, கிழக்கில் காணிகள், பொதுமக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்தும் இந்த உரையில் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

சிவில் சமூக தரப்புகள் கடும் கண்காணிப்புக்கும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது குறித்தும், சிவில் நிர்வாகம் இராணுவ மயப்படுத்தப்படுவதற்கு எதிராகவும் அமெரிக்கா இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...