USAF F 16 Poland
செய்திகள்உலகம்

சீனாவின் கொடியுடன் அமெரிக்க போர் விமானங்களா?

Share

சீனாவின் கொடியுடன் அமெரிக்க போர் விமானங்களை ரஸ்யா உக்ரேன் போரில் பயன்படுத்தலாம் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

டொனால்டு டிரம்ப் தனது குடியரசுக் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய டிரம்ப், “ரஷ்யா மீது எந்தக் காரணத்தை கொண்டும் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று அதிபர் ஜோ பிடன் கூறி வருகிறார். இப்படி பேசுவதை முதலில் அவர் நிறுத்த வேண்டும். மனிதநேயத்திற்கு எதிராக ரஷ்யா செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு நடைபெற நாம் விடக்கூடாது. நேட்டோ என்பது வெறும் காகிதப் புலியாக செயல்பட்டு வருவது வருத்தமளிக்கிறது” என்றார்.

தொடர்ந்து கிண்டலாக பேசிய அவர், உக்ரைன் போரை நிறுத்த ஒரே வழிதான் இருக்கிறது. அமெரிக்க போர் விமானங்களில் சீனக் கொடிகளை பறக்கவிட்டு ரஷ்யா மீது குண்டுகளை வீச வேண்டும்.

பிறகு ரஷ்யாவும், சீனாவும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும். நாம் நிம்மதியாக அமர்ந்து வேடிக்கை பார்க்கலாம்” எனக் கூறினார்.

டிரம்பின் இந்த பேச்சால் அரங்கம் முழுவதும் பெரும் சிரிப்பலை வெடித்தது.

#WorldNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...