அரசுக்குள் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்ததாலேயே விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் -என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசுக்குள் இருந்துகொண்டு எதிரணியின் வேலையை செய்வதற்கே விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் முற்பட்டனர். பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவதைவிடுத்து, பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்தினர். அவர்களிடம் திட்டமிடல் இருக்கவில்லை. அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கும் விதத்திலேயே செயற்பட்டனர். அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகளை வழங்கியும், அவர்கள் அரசுக்கு எதிராகவே செயற்பட்டனர்.
எனவேதான் இவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம். அவர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். அன்று மங்கள செய்ததைபோன்றே இவர்கள் தற்போது செய்ய முற்பட்டனர். அன்று மங்களவை மஹிந்த வெளியேற்றினார். இன்று ஜனாதிபதி கோட்டாபய இவர்களை வெளியேற்றினார்.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment