மிச்செல் பச்லெட்
செய்திகள்அரசியல்இலங்கை

ஐ.நாவுக்கு 5 தமிழ்க் கட்சிகள் கடிதம்!

Share

இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த 5 தமிழ்க் கட்சிகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாருக்குக் கூட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளன.

2022 பெப்ரவரி 25ஆம் திகதியிடப்பட்டு எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் க. சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கான அந்தக் கடிதத்தில்,

“இலங்கையில் நீடித்து வரும் நெறிமுறை முரண்பாட்டிற்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்காமையின் காரணமாகவே தமிழர்கள் மீண்டும் மீண்டும் படுகொலை செய்யப்பட்டு வருவது இனப்படுகொலைக்கு சமம் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கும், அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான பாரிய அட்டூழியங்களை நிறுத்துவதற்கும் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுமக்கள் வாக்கெடுப்பு ஒன்றே ஒரே வழி என்பதை நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

தமிழ் பிரதேசங்களில் அரச அனுசரணையுடன் சிங்கள பௌத்த குடியேற்றங்களை நிறுத்துவதற்கும், சிங்கள – பௌத்த பிரதேசங்களை தமிழ் மாவட்டங்களுக்குள் இணைத்து பிரதேச எல்லைகளை நிர்ணயிப்பதை நிறுத்துவதற்கும், போர் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் தமிழர் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் அபரிமிதமான பிரசன்னத்தை குறைப்பதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், தமிழ் மக்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்களைத் தடுப்பதற்கு பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
mervin silva 1024x576 1
செய்திகள்அரசியல்இலங்கை

150 மில்லியன் ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக வங்கி அதிகாரிகள் சாட்சியம்!

அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் வருமானத்திற்கு அப்பாற்பட்டுச் சொத்துக்களைக் குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்குத் தொடர்பாக, முன்னாள் அமைச்சர்...

images 2 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தந்தை தூங்கியபோது கையிலிருந்து நழுவி விழுந்த 2 மாதக் குழந்தை பலி – தந்தை கைது!

அளுபோமுல்ல, படதொப துடுவ பிரதேசத்தில் தந்தையின் கைகளிலிருந்து தவறி விழுந்த இரண்டரை மாதக் குழந்தை, சிகிச்சை...

MediaFile 5 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி நீர் வெளியேற்றும் பணி ஆரம்பம் – நிலத்தை மாற்ற நீதிமன்றம் தடை!

யாழ்ப்பாணம் செம்மணி, சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள்...

images 4 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியாவில் சோகம்: மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற உயர்தர வகுப்பு மாணவன் நீரில் மூழ்கிப் பலி!

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்...