49948959 3cdb 4a41 aacb 17eec8ee2d3e 2
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – இந்திய அரசுகளின் மீனவர் பிரச்சினை தொடர்பான நகர்வுகளில் திருப்தியில்லை!!

Share

இந்திய இலங்கை அரசுகளின் மீனவர்கள் தொடர்பான நகர்வுகளில் எமக்கு திருப்தி ஏற்படவில்லை என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க, சாமசங்களின் தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,

கடந்த 27 ஆம் திகதியிலிருந்து வடக்கு மீனவர்களின் பிரச்சினை பேசு பொருளாக அல்லது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக சர்வதேசங்களிற்கு காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஆனால் தீர்வு நோக்கி நகருவதாகவே அல்லது தீர்வு நோக்கி முயற்சிப்பதாகவோ இலங்கை இந்திய அரசுகளின் செயற்பாடுகள் அமையவில்லை. இது இலங்கை மீனவர்களுக்கு திருப்தியாக இல்லை.

நாம் பிரதேச செயலகங்கள் மாவட்ட செயலகம், இந்திய துணைத்தூதுவர் இல்லம் என்பவற்றை முடக்கியும் கூட இந்திய மத்திய அரசு இது தொடர்பில் ஒரு துளியேனும் கரிசனை காட்டவில்லை.

தொப்புள் கொடி உறவு என்று சொல்லிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் கௌரவ முக ஸ்டாலின் அவர்கள் இந்திய மீனவர்கள் இலங்கையில் பிடிபட்டதும் மத்திய அரசுக்கு அவர்களை விடுவிக்கக் கோரி கடிதம் எழுதுகின்றார். அவருக்கு வடக்கு வாழ் கரையோர மீன் பிடிப்பாளர் சார்பில் கூறிக்கொள்வது யாதெனில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை விடுத்து 2500 இழுவை மடி படகுகளையும் தடை செய்யுங்கள்.

மீனவர்களைப் பொருத்தவரையில் எங்களுடைய பிரச்சினைகளை இரு நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடாக இரு நாட்டு மீனவர்களும் பேசித்தான் இதற்கான தீர்வினை எட்ட வேண்டும்.

கடந்த காலங்களைப் போன்று அதிகாரிகள் மட்டத்தில் குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி காலத்தை கடத்தும் செயற்பாட்டை மத்திய அரசு உடன் நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டு அரசும் சரி இந்திய மத்திய அரசும் சரி எமது போராட்டங்களையும் எமது கோரிக்கைகளையும் நீர்த்துப் போகச் செய்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .என்றார்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...