உலகில் சுமார் 70 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டால், தொற்றுநோயின் கடுமையான கட்டம் இந்த ஆண்டு நடுப்பகுதியில் முடிவடையும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் உலக அளவில் 70 சதவீத தடுப்பூசிகள் செலுத்தப்படுமாயின் கொவிட் தொற்றின் கடுமையான கட்டம் உண்மையில் முடிவடையும் .
எனினும் அதனை செய்வது நம் கையில் உள்ளது. இது முக்கியமான விடயம். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அவர் கூறினார்.
#WorldNews
Leave a comment