12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி தொடர்பில் பரிந்துரைக்கும் கட்டத்தில் உள்ளது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவினால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக இன்னும் சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இரண்டாவது டோஸை வழங்குவதற்கு சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்காக அமைச்சு காத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, இன்று தெரிவித்திருந்தார்.
மேலும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவது தொடர்பில் சுகாதார அதிகாரிகளிடமிருந்து பரிந்துரைகளை அமைச்சு கோருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment