image 25aec80160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலஆக்கிரமிப்பை நிறுத்த கோரி முல்லையில் மாபெரும் கவனயீர்ப்பு!!

Share

கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் இடம்பெறும் சுமார் 1000 ஏக்கர் பூர்வீக நில அபகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான கிராமங்களில் 12 கிலோமீற்றர் நீளமான கடற்கரையுடன் இணைந்த கிராம மக்களின் சுமார் 1000 ஏக்கர் பூர்வீக நிலங்கள் இவ்வாறு அபகரிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே சிங்கள குடியேற்றங்களாலும்,அரச நிறுவனங்களின் திட்டமிட்ட ஆக்கிரமினாலும் தமிழ் நிலங்கள் கேள்விக்குள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இதற்கு மேலதிகமாக கனிய மணல் கூட்டுதாபனத்துக்கு என மிகுதி நிலங்களையும் அபகரிக்கும் வேலையை அரசு மிக திட்டமிட்டு முன்னெடுத்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தமிழ் மக்களுக்கு சொந்தமான இந்த நிலங்களை அபகரிப்பததை கண்டித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொக்கிளாய் கிராம மக்களால் இன்று (12) கொக்கிளாய் பாடசாலை முன்பாக எதிர்ப்பு போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் மக்களுடன் இணைந்து மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...