dilum amunugama
செய்திகள்இலங்கை

எகிறுமா பேருந்து கட்டணம் – அமைச்சர் வெளியிட்ட பகீர் அறிவிப்பு!!

Share

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பினால் , பேருந்து பயண கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கருத்து வெளியிடுகையில்,

எரிபொருள் மற்றும் உதிரிப்பாகங்களின் விலைகளின் அடிப்படையில் விலை சூத்திரம் ஒன்று உள்ளது. அதனடிப்படையில், பேருந்து கட்டணங்களை குறைப்பதற்கான சந்தர்ப்பம் இருந்த போதிலும், கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பேருந்து உரிமையாளர்களின் நலனை கருத்திற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தவில்லை.

அதேநேரம், இறுதியாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் தமது கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என சகல சங்கங்களின் பிரதிநிதிகளும் எமக்கு உறுதியளித்திருந்தனர்.

எனவே அதனடிப்படையில் பேருந்து பயணக் கட்டணங்களில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிரிக்கெட் திருவிழா: 15 தனியார் ஜெட் விமானங்களில் இலங்கை வந்தடைந்த உலகளாவிய விஐபிக்கள்!

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா –...

image 1200x800 23
செய்திகள்உலகம்

ஜெனீவா பேச்சுவார்த்தைக்கு மத்தியில் போர் தீவிரம்! – ரஷ்ய துறைமுகம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; ஒடேசா இருளில் மூழ்கியது!

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அமெரிக்காவின் முன்னிலையில் ஜெனீவாவில் இன்று...

image 1200x800 24
செய்திகள்இலங்கை

ஊழலுக்கு எதிரான போரில் இலங்கையின் மகா பாய்ச்சல்! -அநுர அரசாங்கத்திற்கு மக்கள் பாராட்டு!

கடந்த 70 வருட கால அரசியல் வரலாற்றில் ஊழல் நிறைந்த நாடாகப் பார்க்கப்பட்ட இலங்கை, அநுர...