India Cricket Team
விளையாட்டுசெய்திகள்

ஒருநாள் தொடரையும் வெல்லுமா தென்னாபிரிக்கா!!

Share

இந்தியா- தென்னாபிரிக்கா அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் நாளை(19) ஆரம்பமாகிறது.

டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் இளம் நட்சத்திரம் ராகுல் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் எதிர்பார்ப்பில் உள்ளது.

துடுப்பாட்டம், பந்துவீச்சு,களத்தடுப்பு என எதிலும் சளைக்காமல் சமபலத்துடன் உள்ள தென்னாபிரிக்கா அணி இந்தியாவிற்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பவுமா தலைமையிலான தென்னாபிரிக்க அணியில் சிறந்த ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் நாளைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் நாளை மோதுவது 85-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 84 ஆட்டத்தில் இந்தியா 35-ல், தென் ஆப்பிரிக்கா 46 -ல் வெற்றிபெற்றுள்ளன. 3 போட்டி முடிவு இல்லை.

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகிறது.

இந்தியா: லோகேஷ் ராகுல் (கேப்டன்), பும்ரா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, இஷான்கி‌ஷன், வெங்கடேஸ் அய்யர், ஸ்ரேயாஸ் அய்யர், ரி‌ஷப்பண்ட், சூர்யகுமார் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், ‌ஷர்துல் தாகூர், அஸ்வின், சாஹல், தீபக் சாகர், பிரசித் கிருஷ்ணா, ஜெயந்த் யாதவ்.

தென் ஆப்பிரிக்கா: பவுமா (கேப்டன்), கேசவ் மகாராஜ் (துணை கேப்டன்), குயின்டன் டிகாக், மார்க்கிராம், ஜான்மேன் மலன், மில்லர், வான்டர் டூசன், ஹம்சா, கெய்ல்வெரீனி, ‌ஷம்சி, ரபடா, பிரிட்டோரியஸ், பெகுலுவாயோ, பர்னல், நிகிடி, சிசாந்தா மகலா, ஜான்சென்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...