நாடுமுழுவதும் செயற்படும் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் காணிகள், வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு கே.ஏ.ரம்யா காந்தி அறிவிப்பு விடுத்துள்ளார்.
அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான பெரும்பாலான காணிகள் அங்கீகாரமற்ற ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் , அதிக அளவில் வாகனங்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தப்படுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் காரனமாக,
குறித்த அறிவுறுத்தலுக்கமைய அனைத்து அரசு நிறுவனங்களும் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சின் கட்டுப்பாட்டாளர் நாயகம் கே.ஏ.ரம்யா காந்தி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
.
இவ்வாறு அங்கீகாரமற்ற வகையில் பயன்படுத்தப்படும் உடமைகள் தொடர்பான தகவல்களும், அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a comment