நடிகர் நடிகைகளுக்கு காதல் கசந்தால் என்ன நடக்கும் என்பதற்கு அமெரிக்க காதல் ஜோடி உதாரணமாகியுள்ளது.
அமெரிக்காவில் ஹாலிவுட் பட உலகில் மிகவும் பிரபலமாக விளங்கிய நட்சத்திர காதல் ஜோடி ஜேசன் மோமோவா, லிசா போனட். இவர்கள் முதன்முதலாக 2005-ம் ஆண்டு, ஜாஸ் கிளப் ஒன்றில் சந்தித்தனர். அப்போதே இருவரும் காதல் வயப்பட்டனர்.
லிசா 2007-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையையும் அடுத்த ஆண்டில் ஒரு ஆண்குழந்தையையும் பெற்றார். அதன்பின்னர் 2017-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது 5 ஆண்டுகள் கடந்த நிலையில் திருமண வாழ்க்கை அவர்களுக்கு கசந்து போனது. இருவரும் தங்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக கூட்டாக சமூக ஊடகம் ஒன்றில் அறிவித்துள்ளனர்.
குறித்த அறிக்கையில் , “எங்களுக்கு இடையேயான காதல் தொடர்கிறது. அது அறியப்படவும், வாழவும் விரும்பும் வழிகளில் உருவாகிறது.
நாங்கள் ஒருவரை ஒருவர் விடுவித்துக் கொள்கிறோம். இந்தப் புனிதமான வாழ்க்கை மற்றும் எங்கள் குழந்தைகள் மீதான பக்தி அசைக்க முடியாதது” என கூறி உள்ளனர்.
இவர்களின் பிரிவு ஹாலிவுட் பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் இந்த காதல் வாழ்க்கை பற்றி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
#WorldNews
Leave a comment