samal rajapaksa
இலங்கைசெய்திகள்

அடிதடியில் ஈடுபட்ட பிக்கு : சமல் முன்னிலையில் சம்பவம்

Share

ஜனாதிபதி, பிரதமரின் மூத்த சகோதரான அமைச்சர் சமல் ராஜபக்ச மற்றும் சூரியவெவ கிராம மக்களுக்கு இடையில் இன்று மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

மஹாவெலி காணி பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இடம்பெற்ற வாய்த்தராறு மோதல் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காணி பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்வதற்காக அமைச்சர் ராஜபக்ஷவை சந்திப்பதற்கு சூரியவெவ கிராம மக்கள் அவருடைய அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

இதன் போது அங்கிருந்த தேரர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அங்கிருந்த சிலருக்கு குறித்த பிக்கு தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளார். எனினும் இறுதியில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படவுள்ளதென அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...