இலங்கையில் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அனுமதியின்றி, ட் ரோன் கமராவை பறக்கவிட்டு புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்த இந்திய தம்பதியினர் வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர், நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பதிவுசெய்த வீடியோ மற்றும் எடுத்த படங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக – அதேபோல தேசிய பாதுகாப்புடன் தொடர்புபடாத விடயங்கள் என்பதால் அவர்களை விடுவிப்பதற்கும் உத்தரவு வழங்கப்பட்டது.
இந்தியாவின் ஹைதராபாத் பகுதியில் இருந்து தேனிவுக்காக இலங்கை வந்த தம்பதியினருக்கே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
#Srilankanews
Leave a comment