ஒரு வருடமும் மூன்று மாதமும் நிரம்பிய குழந்தையொன்று தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று முன்தினம் (30) ஊவா வெல்லஸ்ச, கோணகங்கார பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையை வீட்டுக்குள் நித்திரையாக்கிவிட்டு தாயும் தந்தையும் தோட்ட வேலைக்குசென்று, இடையிடையே தாயும் தந்தையும் மாறி மாறி உறங்கும் குழந்தையைப் பார்த்துச் சென்றுள்ளனர்.
மதியம் ஒரு மணியளவில் வந்து பார்த்த போது குழந்தை உறங்கிய இடத்தில் காணவில்லை. அப்பகுதி முழுவதும் தேடிய போது குழந்தைதண்ணீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சிசுவின் பிரேத பரிசோதனை நேற்று (31) மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்றது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோணகங்கார பொறுப்பதிகாரி எல்.டி. சதீஷ்குமார மேற்கொண்டுள்ளார்.
#SrilankaNews
Leave a comment