1574160726 pb jayasundara
செய்திகள்அரசியல்இலங்கை

ஜயசுந்தரவின் இராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி!!

Share

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவினால் கையளிக்கப்பட்ட இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அரசுக்கு சார்பான ஊடக வலையமைப்பொன்றின் இணையத்தளம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், புதிய ஜனாதிபதி செயலாளராக, தற்போதைய பிரதம செயலாளர் காமினி செனரத் நியமிக்கப்படக்கூடுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

பி பீ ஜயசுந்தர பதவி விலக வேண்டும் என அரசுக்குள்ளேயே அழுத்தங்கள் வலுத்த நிலையில், அவர் பதவி துறக்க தயாரானார். ஆரம்பத்தில் ஜனாதிபதி கடிதத்தை ஏற்கவில்லை. எனினும், தற்போது ஏற்றுள்ளார்.

பதவி துறக்க முடிவெடுத்துள்ள பி பீ ஜயசுந்தரவுக்கு நிதி அமைச்சர் சிரேஷ்ட ஆலோசகர் பதவியொன்று கிடைக்கப்பெறவுள்ளது. இதற்கு நிதி அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...