இந்திய நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து அரசியலில் களமிறங்கப்போகிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
டிசம்பர் 24 ஆம் திகதி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.
ஹர்பஜன் சிங்கின் ஓய்வு குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரபல ஐபிஎல் அணியின் பயிற்சி ஊழியராக இணையவுள்ளதாகவும், அதேவேளை
பஞ்சாப் தேர்தலை முன்னிட்ட அவர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதுதொடர்பாக ஹர்பஜன் சிங் கூறியதாவது,
அனைத்து கட்சிகளிலிருந்தும் எனக்கு அரசியல்வாதிகளை தெரியும். கண்டிப்பாக பஞ்சாப்பிற்காக சேவை ஆற்றுவேன். ஒருவேளை அரசியல் வழியாக அல்லது வேறு வழியாக கூட சேவை ஆற்றுவேன்.
ஆனால் இதுவரை எவ்வித முடிவும் நான் எடுக்கவில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
#SportsNews
Leave a comment