202112251113490934 Man held in West Bengal for killing his lover Gurugram SECVPF
செய்திகள்இந்தியா

நான்காவது திருமண முயற்சி கை கூடாததால் காதலியை கொலை செய்த நபர்!

Share

டாக்சி டிரைவரான பிகுல் இஸ்லாம் தன்னை திருமணம் செய்ய மறுத்த காதலியை கொலை செய்து விட்டு தலைமறைவாகியுள்ளார். குறித்த சம்பவம் குருகிராமில் செப்டம்பர் மாதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 3 திருமணங்கள் முடித்த பிகுல் இஸ்லாம் தன்னுடைய 3 ஆவது மனைவியுடன் குருகிராமில் வசித்து வந்துள்ள நிலையில் அங்குள்ள இளம் யுவதியுடன் காதல் மலர்ந்துள்ளது. செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி குறித்த யுவதி பால் வாங்க வெளியில் சென்று வீடு திரும்பாததால் குடும்பத்தார் பொலிஸில் முறைபாட்டை மேற்கொண்டிருந்தனர்.

தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னர் யுவதியின் சடலத்தை கண்டு பிடித்த பொலிஸார் சந்தேகநபரை தொடர்ந்தும் தேடி வந்துள்ளனர். நேற்றைய தினம் சந்தேகநபரான பிகுல் இஸ்லாம் இந்தியா வங்காளதேசத்தின் சர்வதேச எல்லைப்பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் குறித்த இளம் யுவதியை கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...