நத்தார் பண்டிகையை முன்னிட்டு, ஒமைக்ரோன் வைரஸ் பரவல் அச்சத்தால் அமெரிக்காவில் உள்ள யுனைட்டட் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவங்களைச் சேர்ந்த 200 விமானங்களின் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒமைக்ரோன் வைரஸ் தங்களது விமான குழுவினர் மற்றும் ஊழியர்களையும், பாதித்திருப்பதால் சேவைகளை நிறுத்தியதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, அந்நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதியாகிய அறிகுறிகள் அற்ற மருத்துவப் பணியாளர்களுக்கான தனிமைப்படுத்தல் நாட்களின் எண்ணிக்கை 7 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
#WorldNews
Leave a comment