நாட்டில் தற்போது காணப்படுகின்ற விலைவாசி அதிகரிப்பை கண்டித்து வலி. மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்றையதினம் வலி. மேற்கு பிரதேச சபைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 46 ஆவது பொதுக்கூட்டத்தொடரில் அனுமதி பெற்ற பின்னர் குறித்த போராட்டத்தில் சபை உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேட்சைக்குழு ஆகியன இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தினர்.
ஆனால் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி போன்றன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment