1640157834 protest 02
செய்திகள்இந்தியா

இலங்கை அரசை கண்டித்து இந்திய மீனவர்கள் போராட்டம்!

Share

இந்திய மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் இந்திய மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்கச்சிமடத்தில் இவ்வாறு உண்ணாவிரத போராட்ட்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 3 நாட்களாக எல்லைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 68 இந்திய மீனவர்களையும், அவர்களின் 10 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள மீனவர்களை விடுதலை செய்யாத பட்சத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர்.

அத்தோடு இவர்கள் இலங்கை அரசின் செயற்பாட்டையும் கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.

 

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...