யமுனானந்தா
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாண மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொற்றுகள்!

Share

தற்போது நாட்டில் பரவி வரும் டெங்கு, உண்ணி மற்றும் மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனானந்தா தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

உண்ணி காய்ச்சல் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் சிகிச்சை அளித்து பாதுகாக்கலாம். வயல் தோட்டங்களில் மழைக்கு பின்னர் தொற்றும் நோயாக உண்ணி காய்ச்சல் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் பரவலும் அதிகமாக காணப்படுகின்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மூலமே அதனை தடுக்கலாம் என தெரிவித்தார்.

அத்தோடு பல வருடங்களின் பின்னர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ள ஒருவரிடம் மலேரியா காய்ச்சல் இனங்காணப்பட்டுள்ளதால் மலேரியா காய்ச்சல் பரவும் அபாயமும் இலங்கையில் காணப்படுகின்றது.

ஆகவே, யாழ்ப்பாண மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 24
இலங்கைசெய்திகள்

அற்ப அரசியலுக்காக இனவாதம் பேசும் அரசியல் வியாபாரிகளுக்கு காலம் சிறந்த பாடத்தை கற்பிக்கும்! சந்திரசேகர்

“அற்ப அரசியலுக்காக இனவாதம் பேசி தேசிய மக்கள் சக்தியையும், தமிழ் பேசும் மக்களையும் பிரிக்க முற்படும்...

9 24
இலங்கைசெய்திகள்

ஒருவருக்கு நாளொன்றுக்கு 7 கிராம் உப்பு போதுமானது

ஒருவருக்கு நாளொன்றுக்கு ஏழு கிராம் உப்பு போதுமானது என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில்...

8 24
இலங்கைசெய்திகள்

இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்கள்

இலங்கையின் பாரம்பரிய சுகாதார சேவைகளை வலுப்படுத்த 304 ஆயுர்வேத மருத்துவர்களை நியமிக்க ஆயுர்வேதத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக...

7 24
உலகம்செய்திகள்

சதம் விளாசிய சாய் சுதர்சன்: டெல்லியை வீழ்த்திய குஜராத்

நடைபெற்று வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் (18.05.2025) போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை 10...