டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டதாக டயகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டயகம 5ம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய சாமிநாதன் தங்கேஸ்வரி என்ற பெண்ணே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அவர் மரணம் குறித்து இதுவரை தெளிவான காரணம் எதுவும் வெளிவரவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment