வடமாகாணத்தில் டெங்கு நோய் பரவும் ஆபத்து இருப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று (06) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
இற்றைவரை வடமாகாணத்தில் பாரியளவான டெங்குப் பரவல் ஏற்படவில்லை. வடமாகாணத்தின் இன்றைய காலப்பகுதிவரையில் 238 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
#SrilankaNews
Leave a comment