வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய 21 பேருக்கு இதுவரை ஒமிக்ரோன் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தானில் ஒமிக்ரோன் உறுதியானவர்களில் 4 பேர் அண்மையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வகை கொரோனாத் தொற்று பாதிப்பு சுமார் 38 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்தியாவில் விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த நிலையில், ஒமிக்ரோன் பாதித்த நாடுகளில் இருந்து வருவோர் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இதனையடுத்து தலைநகர் டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரோன் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், மொத்தமாக இந்தியாவில் 20 இற்கும் மேற்பட்டோருக்கு புதிய வகை தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 4 பேர் நகரில் 100 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
அந்த 4 பேரும் கடந்த மாதம் 25ஆம் திகதி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்தனர் என்றும் கடந்த 29ஆம் திகதி, ஜெய்ப்பூரில் நடந்த திருமண விழாவில் அவர்கள் கலந்துகொண்டதாக அம்மாநில சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளது.
#SrilankaNews
Leave a comment