திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெடியாவ பகுதியில் தனியார் காணியிலிருந்து, நிலையில் அதிசக்திவாய்ந்த மோட்டார் குண்டு இன்று (06) மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
திருகோணமலை விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த மோட்டார் குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் நீதிமன்ற நீதவானின் அனுமதியின் பின் குறித்த மோட்டார் குண்டை செயழிப்பது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் தற்போது மோட்டார் குண்டு பொலிஸ் பாதுகாப்புடன் இருக்கின்றது. இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment