இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் பூநகரிக்குத் திரும்பு பிரதான சந்திப் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவத்தில் சிக்கிய இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த இளைஞர்கள் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment