DrugsGraphic
கட்டுரைகலாசாரம்

போதையும் – சீரழியும் மாணவர் சமுதாயமும்!

Share

இன்றைய உலகில் தொழில்நுட்பத்தை நாடிச் செல்லும் மாணவர்கள் மத்தியில் நாம் எதிர்பாரக்காத பிரச்சினைகளை, மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம்பெறுகின்றது. இதில் குறிப்பாக கல்வி கற்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் பிரச்சினை பலராலும் பேசப்படுகின்றது.

மாணவர்கள் தங்களது இளமைப் பருவத்தில் நடாத்தும் அட்டகாசங்களைப் பற்றி சிந்திக்கின்றார்களே தவிர அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதில்லை. இதன் விளைவாககவே போதைக்கு ஆளாகுகின்றார்கள். திடகாத்திரமாக ஆரோக்கியமாக, ஆளுமையுள்ளவர்களாக வளர்வதற்கு போதை மற்றும் தீய நடத்தைகள் தடையாக இருக்கின்றன என்பதை உணராமல் இருக்கின்றார்கள்.

எந்தவொன்றையும் அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஆசையும் சில நேரம் அவர்களது அழிவுக்கே காரணமாகி விடுகின்றது. நண்பர்களுடன் பழகும்போது சிகரட் புகைத்தல், பியர் குடித்தல் என்ற பழக்கத்துடன் பீடா, பாபுல், பான்பராக், மாவா, ஸாதா என்ற பாவனைக்கு ஆளாகி இறுதியில் எல்லா போதைக்கும் அடிமையாகி விடுகின்றார்கள். தற்போது சிறுபிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளையும் போதைக்குப் பயன்படுத்துகிறார்கள். அத்துடன் மூக்குத்தூளையும் பயன்படுத்துகிறார்கள்.

போதை என்றால் என்ன?
போதை என்றால் என்ன? அதன் விபரீதம் எப்படிப்பட்டது என்பதை அறியாமலே போதை பாவனையில் மாணவர்கள் ஈடுபடுகின்றார்கள். போதை என்பது தன்னிலை மறக்கச் செய்தல், உடல்-உள பாதிப்புக்களை ஏற்படுத்தல் என்பனவாகும். போதையை பயன்படுத்தியதும் தனது அறிவை இழக்கின்றான். மயங்குகின்றான். உடல் பலவீனமடைகின்றது. உளம் கெட்டு விடுகின்றது. தன்னால் உறுதியாக நிற்க முடியாமல் ஆடி அசைந்து விழுகின்றான். அதன் பின் அவனுக்கு ஏற்படும் எந்தவொரு விடயத்தைப் பற்றியும் அறியாமல் இருக்கின்றான்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதை பாவனைக்கு ஆளாகுவதற்குப் பிரதான காரணம்:

1. வீட்டுச் சூழல்
2. சமூக சூழல்
3. குடும்பப் பிரச்சினை
4. போட்டி சூழலுக்கு முகம்கொடுக்க முடியாமை
5. ஊடகங்கள்

வீட்டுச் சூழல்

வீட்டுச் சூழலிருந்து பல பிள்ளைகள் போதை பாவனைக்கு ஆளாக்குகின்றார்கள். தந்தை சிகரட் புகைப்பவராக இருந்தால், அந்த சிகரட்டை வாங்குவதற்கு பிள்ளையிடம் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார். அந்தப் பிள்ளை தந்தையுடைய புகைத்தல் ஸ்டைலை பார்த்து நாளடைவில் அதனை திருட்டுத் தனமாக புகைக்க ஆரம்பிக்கின்றது.

வீட்டில் விருந்துபசாரத்தின்போது பியர் மற்றும் மது பாவிக்கப்படும்போது பிள்ளை அவைகளை சக நண்பர்களுடன் சேர்ந்;து பயன்படுத்த ஆரம்பி;க்கின்றனர். இவை நல்லவை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்ற நிலை காணப்படுவதால் பிள்ளைகள் விளைவுகளைப் பற்றி அஞ்சாமல் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றார்கள். அதுபோல் வீட்டுச் சூழலில் ஆன்மீகம் இல்லையாயின் நிலமை மோசமாகி விடும்.

சமூக சூழல்

வீட்டுச் சூழலில் பயன்படுத்திய போதை பொருட்களை பிள்ளைகள் நாளடைவில் சமூக சூழலில் சக தோழர்களுடன் பழகிக் கொள்ள முனைக்கின்றது. சிலவேளை வீட்டுச் சூழலில் சிகரட் புகைத்தல், மது அருந்துதல் போன்றவை இல்லாவிட்டாலும் சமூக சூழலில் அவை விற்பனைக்கு இருக்குமாயின், அவை பயன்படுத்தக்கூடிய பிள்ளைகள் இருப்பார்களாயின் அப்பிள்ளைகளுடன் பழகக் கூடியவர்களும் போதைக்கு ஆளாகிவிடுவார்கள்.

பாடசாலை மாணவர்கள் போதைக்கு ஆளான பல சம்பவங்களில் ஒன்று தான் டீபை ஆயவஉh (பிக்மெச்) என்ற விளையாட்டுப் போட்யின்போது நடைபெறுகின்றது. இதன்போது மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டு பொலிஸ்வரை சென்ற சம்பவங்களும் உண்டு.

குடும்ப பிரச்சினை

குடும்பத்தில் எல்லா பிள்ளைகளிடமும் பெற்றோர் சரிசமமான அன்பு, பாசம் காட்டி அரவணைக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மை வளரவிடாமல் காத்துக் கொள்ள வேண்டும். பெற்றோரிடம் உரிய அன்பும் அரவணைப்பும் கிடைக்காத சந்தரப்பத்தில் பிள்ளைகள் தங்களுக்கு ஏற்பட்ட கவலையை போக்க, போதையை பயன்படுத்தி தீர்வுகாண முனைகின்றனர். அதுபோல் பெற்றோரிடையே பிரச்சினைகள், ஏற்படுமாயின் அல்லது பெற்றோர் பிரிந்து வாழ்வார்களாயின் அதனால் பாதிப்படைபவர்கள் பிள்ளைகள், அப்பிள்ளைகள் அப்பிள்ளை விரக்தி காரணமாக போதைக்கு அடிமையாகுவர்.

சில சந்தர்ப்பத்தில் தாயும் தகப்பனுக்கும் பிரச்சினை தோன்றும் போது தந்தை சிகரட் புகைத்தல் மது அருந்தல் போன்ற காட்சியை பிள்ளை கண்டால் தனக்கு ஏற்படும் பிரச்சினைக்கு இதுதான் தீர்வு என பிள்ளையும் பாவனைக்கு ஆளாகும்.

போட்டி சூழலுக்கு முகம் கொடுக்க முடியாமை பாடசாலை வாழ்க்கையிலும் ஏற்படும் சவால்களுக்கும் போட்டிகளுக்கும் முகம் கொடுக்க முடியாமல் தோல்வி மனப்பான்மைக்கு ஆளாகும்போது போதையை நாடுகின்றனர். பரீட்சையில் தோல்வி பொதுவான போட்டி நிகழ்ச்சிகளில் தோல்வி, படிக்க முடியா பிரச்சினை எனும் போது போதையினை பயன்படுத்துகின்றனர்.

ஊடகங்களின் தாக்கம்

மேலே கூறப்பட்ட காரணிகளுக்கு உடந்தையாக இருப்பதே மீடியாவாகும். எந்தவொரு பிரச்சினையின் பேர்தும் அதற்கு முகம் கொடுக்க முடியாதபோது போதையை பயன்படுத்துவதையே ஊடகம் முக்கியமான செய்தியாக காட்சியப்படுத்துகின்றது. காதல் தோல்வி, குடும்பத்தகராறு, வாழ்வில் தோல்வி, வேலையின்மை, விரக்தி, நண்பர்களுடன் விரிசல் போன்ற காட்சிகளில் கதாநாயகன் நாடக்கூடிய முதல் தீர்வு சிகரெட் புகைப்பது, மது அருந்துவது என்பதைத்தான் இந்த சினிமா மற்றும் நாடகங்களில் காட்டப்படுகின்றது. இது போல் கதாநாயகன் பல்வேறு ஸ்டைகளில் புகைத்து காட்டுவதும் இதற்கான மற்றொரு காரணமாகும்.

போதையினால் ஏற்படும் விளைவுகள்

பிள்ளைகள், மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் போதைக்கு அடிமையாகும்போது குடும்பத்திலும் சமூகத்திலும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகின்றன. குடும்பத்திற்குள் ஒற்றுமை குலைந்து விடுகின்றது. அவநம்பிக்கை ஏற்படுகின்றது. முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றது. (வீணான செலவுகள்) வறுமை ஏற்படுகின்றது. குடும்பத்திற்கென்று இருந்த மரியாதை, கௌரவம் இழக்கப்படுகின்றது. இதனால் மனச்சோர்வு ஏற்பட்டு விரக்தி நிலைக்குச் செல்கின்றனர். பிள்ளைகளுடைய எதிர்கால கனவுகள், இலட்சியங்கள் நாசமாகின்றன. இலக்கில்லாமல் வாழ்வு அழிந்து விடுகின்றது. புத்தகங்களை சுமந்து செல்ல வேண்டியவர்கள் பல்வேறுபட்ட நோய்களை சுமந்தவர்களாக நடமாட ஆரம்பிக்கின்றார்கள். பதினாறு மற்றும் பதினெட்டு வயதை அடையும் போதே வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.

போதைக்கு அடிமையானவர்களை அடையாளம் காணும் வழி

பிள்ளைகள் பழகக் கூடிய புதிய, பழைய நண்பர்களை அடையாளம் காண வேண்டும். ஆரம்பத்தில் பிள்ளை பழகிய நண்பர்கள் யார்? அவர்களுடன் மேற்கொள்ளும் நட்பு எத்தகையது? ஏற்பட்டு வரும் மாற்றம் எத்தகையது? என்பதை பெற்றோர் அறிய வேண்டும். அவர்களது செல்போன் பாவனை எத்தகையது? அதிகமாக பேசுபவர்கள் யார்? என்பதையும் அறிய வேண்டும். சிலவேளை பிள்ளை அல்லது மாணவன் பழைய நண்பர்களின் நட்பு மோசமானது எனக்கருதி புதிய நண்பர்களை தேடிக் கொள்ளலாம். அல்லது பழைய நண்பர்களின் தொடர்பை விட புதிய நண்பர்களின் தொடர்பால் திசை மாறியும் போகலாம். இதில் பெற்றோர் அவதானமாக செயற்பட வேண்டும்.

பாடசாலைக்கு போய்விடும் நேரம் மேலதிக வகுப்புக்கு போய் வரும் நேரம், இதில் ஏற்படும் மாற்றங்கள் பொழுது போக்குகளில் ஈடுபட்டவர்கள் ஒதுகிங்கிக் கொள்வது நல்ல பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது விருப்பான ஆகுமான நல்ல விடயங்களில் ஆர்வம் குறைந்து வருவது, விளையாட்டில் நாட்டமில்லாமல், சுத்தம் பேணாமல் இருப்பது, வாயில் துர்வாடை வீசுவது போன்ற விடயங்களை காணப்படுமாயின் பெற்றார் உடனே கவனம் செலுத்த வேண்டும்.

அதுபோல் வீட்டில் சின்னச்சின்ன பொருட்கள் காணாமல் போவது அல்லது பணம் காணாமல் போவது படிப்பில் ஆர்வம் குறைவது, அடிக்கடி மறதி ஏற்படுவது, பதற்றமாகவும் ஆக்ரோக்ஷமாகவும் நடந்து கொள்வதும் காணப்படுமானால் பெற்றோர் கண்டிப்பாக பிள்ளைகள் விடயத்தில் மிக அவதானம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக அண்மைக்காலங்களில் அரச தரப்பினர் மத்தியில் போதைப்பொருள் பாவனையினை சட்டப்பூர்வமானதாக்கும் கோரிக்கைகள் வேதனையளிக்கின்றது. எனினும் பிள்ளையின் மீது அதிக அன்பு காட்டி ஏமாந்து போகாமலும் அதிக கோபத்தையும் வெறுப்பையும் காட்டி ஒதுக்கி விடாமலும் நடுநிலைமையுடன் நடந்து பிள்ளையின் வாழ்வை சீர் செய்ய முனைய வேண்டும். எல்லா பிரச்சினைக்கும் தீர்வு உண்டு. அதனை சரியாக தேடிக் கொள்ளவே வழிகாண வேண்டும்.

சி.அருள்நேசன்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...