puji
செய்திகள்உலகம்

லிபியத் தேர்தல்-கடாபியின் மகனுக்கு இடமளித்ததா நீதிமன்று?

Share

லிபியா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு, கடாபியின் மகனுக்கு, அந்நாட்டு நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.

லிபியாவில் 50 வருடங்களுக்கு மேலாக சர்வாதிகார ஆட்சி புரிந்தவராக மோமர் அல் கடாபி கருதப்படுகிறார்.

அதனையடுத்து கடந்த 2011ஆம் ஆண்டு அவர் கிளர்ச்சிப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதேவேளை அந்நாட்டில் தற்போது முகமது அல் மெனிபி ஜனாதிபதியாகப் பதவி வகிக்கிறார்.

இந்நிலையிலேயே அங்கு புதிய ஜனாதிபதியைத் தேர்தெடுப்பதற்கான ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

குறித்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு கடாபியின் மகன் சையிப் அல் இஸ்லாம் கடாபி வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது தந்தை மீதான குற்றச்சாட்டுக்களைக் காரணம்காட்டி, அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

அந்நாட்டின் தேர்தல் ஆணையகத்தால், கடாபியின் மகனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக அவர் அந்நாட்டின் மேல்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து குறித்த வழக்கை விசாரணை செய்த மேல்நீதிமன்றம், தேர்தல் ஆணையகத்தின் முடிவை இரத்துச் செய்து உத்தரவிட்டதுடன், கடாபியின் மகன் தேர்தலில் போட்டியிடவும் அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...