குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கும் கணினி மற்றும் அலைபேசி விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
இவர் இதனை நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற உரையாடலின் போதே தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் மேலும் உரையாற்றுகையில்,
கணினி விளையாட்டுகளில் பெரும்பாலான குழந்தைகள் அடிமையாகி உள்ளனர். சில விளையாட்டுக்கள் குழந்தைகளை தற்கொலை வரை இட்டுச் செல்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ் விளையாட்டுக்களை தடை செய்வதற்கு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறும் அவர் நாடாளுமன்றத்தில் கேட்டுக் கொண்டார்.
#SriLankaNews
Leave a comment